கரூர் : மருந்து கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டத்தில் மருந்து கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அய்யம்பாளையம் பகுதியில் வசிக்கும் பழனிச்சாமி என்பவர் தளவாபாளையம் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை மற்றம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். பழனிச்சாமி நேற்றிரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து  வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்து வருகின்றனர்.

Night
Day