நாமக்கல் : பட்டா வாங்கி தருவதாகக்கூறி சுமார் ரூ.4.50 லட்சம் மோசடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டா வாங்கி தருவதாகக்கூறி சுமார் நான்கரை லட்சம் பணமோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். ராசிபுரம் பகுதியை சேர்ந்த காந்தி என்பவர், நியூ காந்தி மக்கள் இயக்கம் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த 19 பேரிடம், பட்டா பெற்று தருவதாகக்கூறி, தலா 25 ஆயிரம் ரூபாய் பணம் வசூலித்துள்ளார். மேலும், நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என கூறி கூடுதல் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த நபர்கள், ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடி பேர்வழி காந்தியை கைது செய்தனர்.

varient
Night
Day