தரமற்ற முறையில் தொகுப்பு வீடுகள்... பிரபுதேவா போல் டான்ஸ் ஆடும் சுவர்கள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே இருளர் பழங்குடி மக்களுக்கு அரசு சார்பில் கட்டப்படும் தொகுப்பு வீடுகள் தரமற்ற முறையில் இருப்பதாக பயனாளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மக்கள் நலனில் அக்கறை இல்லாத விளம்பர அரசு கட்டிவரும் தரமற்ற தொகுப்பு வீடுகள் குறித்து விரிவாக பார்ப்போம்...

செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வடபட்டினம் ஊராட்சியில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருளர் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு 21 வீடுகள் மொத்தம் 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன.

ஆனால் காலம் அமைத்து கம்பிகளை கொண்டு நிறுத்தாமல், ஒரு அடி ஆழம் மட்டுமே தோண்டப்பட்டு வீடுகள் கட்டப்படுவதாக பயனாளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒரு அடி மட்டுமே தோண்டப்பட்டு கட்டப்படும் வீடுகள் பாதுகாப்பாக இருக்காது என அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், தரமற்று கட்டப்படும் கட்டடம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த தொகுப்பு வீடுகளின் சுவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளதால், கை வைத்தாலே ஆடுவதாகவும், இப்படி இருந்தால் எவ்வாறு அந்த வீடுகளில்  வசிக்க முடியும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆகவே, தங்களுக்காக கட்டப்படும் கட்டடங்களை துறை சார்ந்த அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் ஆய்வு செய்து, தரமான வீடுகளை கட்டி கொடுக்க ஆவன செய்ய வேண்டும் என இருளர் பழங்குடியின மக்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day