சென்னை: 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த 2 வாரங்களாக இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் டிபிஐ வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு விளம்பர திமுக அரசு செவிசாய்க்காத நிலையில், 15வது நாளாள இன்று டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, அருகிலுள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் டிபிஐ வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.

Night
Day