அம்பானி வீட்டுக் கல்யாணம்... கொண்டாடித் தீர்க்கும் பிரபலங்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர்கள் முதல், உலக தொழிலதிபர்கள் வரை பலரின் வருகையால் ஜாம் நகர் களைகட்டியுள்ளது... தாண்டியா நடனமாடிய தல தோனியின் வீடியோவும், இவாங்கா ட்ரம்ப் தாண்டியா கற்றுக்கொள்ளும் வீடியோவும் இணைத்தில் வைரல் ஆகி வருகிறது...

ரிலையன்ஸ் நிறுவன அதிபரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்செண்ட் திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது...

திருமணத்துக்கு முன்பாக வரவேற்பு விழாவுக்கு திட்டமிட்ட முகேஷ் அம்பானி, குஜராத் மாநிலம் ஜாம் நகரில் திருமணத்துக்கு முந்தைய விழாவை நடத்த திட்டமிட்டார்...

அதன் படி உலக தலைவர்கள் முதல் உள்ளூர் சினிமா புள்ளிகள் வரை பலருக்கு முகேஷ் அம்பானி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகளான இவாங்கா ட்ரம்ப், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கான், கிரிக்கெட் வீரர் தோனி, அவரது மனைவி சாக்‌ஷி, கிரிக்கெட் வீரர் பிராவோ உள்ளிட்டோர் திருமணத்துக்கு முந்தைய விழாவில் கலந்து கொண்டுள்ளனர்...

ஜாம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், ஆமீர்கான், சல்மான் கான், ஷாருக்கான், ராம் சரண் ஆகியோர் ஆர்.ஆர்.ஆர். திரைபடத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர்...

தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், பஞ்சாபி பாடல் ஒன்றை மேடையில் பாடி அசத்தினார்...

இதைத்தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு நடமாடி மகிழ்வித்தனர்...

தொடர்ந்து குச் குச் ஹோத்தா ஹை படத்தில் இடம்பெற்ற சாஜன் ஜீ கர் ஆயி பாடலுக்கு சல்மான்கான் நடனமாடி அரங்கை மகிழ்ச்சி பெருக்கில் ஆழ்த்தினார்...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் ஹாலிவுட் பாப் பாடல் ஒன்றுக்கு நடனமாடி கலக்கினார்...

தொடர்ந்து கிரிக்கெட் வீரர் தல தோனி, அவரது மனைவி சாக்ஷி, கிரிக்கெட் வீரர் பிராவோ ஆகியோர் தாண்டியா நடனமாடி அசத்தினர். 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் தாண்டியா நடனம் கற்றுக்கொள்ளும் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மொத்தத்தில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண முன்னேற்பாடு விழா உலக தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வருகையால் பிரம்மாண்ட விழாவாக களைகட்டியுள்ளது...

Night
Day