பீகாரில் முதற்கட்டத் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் முதல் கட்டத் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக, முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுகின்றன. மறுபுறம், காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இந்தியா கூட்டணியில் களமிறங்குகின்றன. இது மட்டுமின்றி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, அசாதுதின் ஓவைசியின் AIMIM ஆகிய கட்சிகள் தனித்து களம்காண்கின்றன. 

முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. நாளை முதல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் நிலையில், வரும் 20ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவின் முடிவுகள், அடுத்த மாதம் 14ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Night
Day