தேஜஸ் எம்.கே.1.ஏ ரக போர் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்.கே.1.ஏ ரக போர் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த தேஜஸ் விமானத்தின் சோதனை மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடந்தது. முன்னதாக, பயிற்சி விமானமான ஹெச்டிடி-40 மற்றும் எஸ்யு-30 எம்கேஐ விமானங்களின் சேவையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். ஆயுதம் மற்றும் ரேடார் ஒருங்கிணைப்பு சோதனைகள் வெற்றிகரமாக நடைபெறும் பட்சத்தில், தேஜஸ் விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

Night
Day