அஇஅதிமுக 54-வது ஆண்டு தொடக்க விழாவில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வாணக்கன்காடு கிராமம் சார்பில் உற்சாக வரவேற்பு - பூங்கொத்து, நினைவு பரிசு வழங்கியும், மாலை அணிவித்தும் மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் வாணக்கன்காடு கிராமத்தில் நடைபெற்ற அஇஅதிமுகவின் 54-வது ஆண்டு தொடக்க விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் பங்கேற்க வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வழிநெடுகிலும் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வாணக்கன்காடு கிராமத்தில் கழக ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்தடைந்தார். விமானநிலையத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் வாணக்கன்காடு கிராமத்திற்கு பயணம் மேற்கொண்ட அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பழைய கந்தர்வக்கோட்டை சுங்கச்சாவடி அருகே கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

கந்தர்வக்கோட்டை பகுதிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். கழகக் கொடியுடன் மகளிர் அணியினர் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்றனர். கந்தர்வகோட்டை கோதண்டராமர் சுவாமி கோவில் சார்பில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அஇஅதிமுக-வின் 54வது ஆண்டுவிழாவில் பங்கேற்பதற்காக வாணக்கன்காட்டிற்கு சென்ற கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கல்லாக்கோட்டை பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு நின்று மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து எழுச்சியுடன் புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்றனர்.

தொடர்ந்து கறம்பக்குடி பகுதிக்கு வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு நின்று மேளதாளங்கள் இசைக்க பட்டாசுகள் வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மாலை அணிவித்து உற்சாகமுடன் வரவேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், சூரக்காடு பகுதிக்கு வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து கழகக் கொடியுடன் உற்சாகமாக வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து வெட்டன்விடுதி பகுதியில் பட்டாசுகள் வெடித்தும், வாணவேடிக்கைகளுடனும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமுடன் வரவேற்றனர்.

அஇஅதிமுக-வின் 54வது ஆண்டு விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வாணக்கன்காடு கிராமத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்தார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வந்தடைந்தபோது கழக நிர்வாகிகள், தொண்டர்கள் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க என எழுச்சி முழக்கமிட்டு வரவேற்றனர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து விழா மேடைக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மா, மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

விழா மேடையில் கிராமமக்கள் சார்பில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பொன்னாடை வழங்கப்பட்டது. தொடர்ந்து பூச்செண்டுகள் வழங்கி, ஆளுயர மாலை அணிவித்து புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்றனர். இதனையடுத்து புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.


Night
Day