மக்களுக்கான நல்லாட்சியை அஇஅதிமுகவால் மட்டும் தான் கொடுக்க முடியும்... அஇதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை அமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். விளம்பர திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாக குற்றம்சாட்டிய புரட்சித்தாய் சின்னம்மா, மாண்புமிகு அம்மா ஆட்சி அமைந்ததும், அது, மக்களுக்கான ஆட்சியாக செயல்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வாணக்கன்காடு கிராமத்தில் நடைபெற்ற அஇஅதிமுக 54-வது ஆண்டு தொடக்க விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்றார். விழாவில் எழுச்சியுரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, அஇஅதிமுகவை தொடங்கி ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கல்வியில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததாக பெருமிதம் தெரிவித்தார். புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்ததும் அதிக அளவில் மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டதாகவும், 30 ஆண்டுகால அஇஅதிமுக ஆட்சியில் தான் கல்வி நிறுவனங்கள் அதிகமாக தொடங்கப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். தற்போதைய திமுக அரசு மக்களுக்கு திட்டங்கள் எதையும் செய்யாமல் விளம்பரம் மட்டுமே செய்து வருவதாகவும் மின் கட்டணம், வீட்டு வரி என பல்வேறு வரிகளை உயர்த்திய திமுக அரசு, ஏராளமான குளறுபடிகளையும் செய்து வைத்துள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டினார். மக்களுக்கான நல்லாட்சியை அஇஅதிமுகவால் மட்டும் தான் கொடுக்க முடியும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட தெரிவித்தார்.

Night
Day