விவசாயிகளிடம் பவரை காட்டும் போலீஸ்...! இதுல இந்த ஆபாச ஆபிசர் வேற...

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒட்டன்சத்திரம் அருகே தனியார் காற்றாலை நிறுவனம் மூலம் அமைக்கப்படும் மின்கம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்ததோடு, விவசாயிகளை ஆபாச வார்த்தைகளால் டிஎஸ்பி திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அப்பியம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று காற்றாலைகளை அதிகளவில் அமைத்துள்ளது. இந்த காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை தனியார் துணை மின் நிலையத்திற்கு எடுத்துச்செல்ல உயர் அழுத்த மின்கம்பங்கள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அருகே உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் வருவதால் ஆபத்து உள்ளதாகக்கூறி அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு மின்கம்பங்கள் அமைப்பதை கடந்த வாரம் தடுத்து நிறுத்தினர். 

இந்நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வந்த தனியார் காற்றாலை நிறுவனத்தினர், மின்கம்பங்களை அமைக்க முயன்றபோது அதை பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் தடுத்து நிறுத்த முற்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களில் பெரும்பாலும் முதியவர்களாக இருந்த நிலையில், அவர்களை கள்ளிமந்தையம் போலீசார் குண்டுகட்டாடக கைது செய்து தரதரவென இழத்துச் சென்று வாகனங்களில் ஏற்றினர்...

போலீசார் மூர்க்கமாக நடந்து கொண்டதில் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தார். அதுப்பற்றியெல்லாம் காவல்துறையினர் கவலைப்படாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து இழுத்துச்சென்று வாகனங்களில் ஏற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையே மூர்க்கத்தனமாக போலீசார் கையாண்ட நிலையில்,  போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களின் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. அவர்களை தரதரவென இழுத்துச்சென்றதோடு குற்றவாளிகளை விட மோசமாக நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வயதான விவசாயி ஒருவரை இழுத்து சென்றபோது, அவரது ஆடைகள் களைந்த நிலையில், அந்த கோலத்திலேயே, போலீசார் அந்த முதியவரை இழுத்துச்சென்று வாகனத்தில் ஏற்றினர்...

இதற்கிடையே வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட விவசாயி ஒருவரை வாகனத்தில் ஏற்றும் போது, ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகேசன் அந்த விவசாயியை, ஆபாச வார்த்தைகளால் திட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பொதுவாக மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் திட்டங்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் விளம்பர திமுக ஆட்சியில், மக்கள் நலனை பற்றி கவலை படாமல், தனியாருக்கு வக்காலத்து வாங்குவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் காவல்துறையினரும் விவசாயிகளிடம் அராஜகத்தில் ஈடுபடுவது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Night
Day