தமிழகம்
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பழங்குடியின மக்கள் போராட்டம்...
புதுச்சேரியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட பழங்?...
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மற்றும் செய்தியாளர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தை செய்தியாளர்கள் முற்றுகையிட்டனர். நுங்கம்பாக்கத்தை சேர்ந்த திமுக செயலாளரான சிற்றரசு என்பவரின், அலுவலக கட்டடத்துக்கு கீழ் உள்ள கொரியர் அலுவலகத்தில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் என்பவரை அங்கிருந்த திமுக நிர்வாகிகள் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து, செந்தில் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி கலைச்செல்வன் என்பவரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர். இந்நிலையில், செந்தில் மற்றும் செய்தியாளர் கதிரவன் ஆகியோர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை தாக்கியதாக அளித்த புகாரிபேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தை செய்தியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட பழங்?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...