சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.48,320க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 48 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 320 ரூபாய்க்குக்கும், கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 78 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரத்து 200 குறைந்து 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day