செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்பட 12 பேர் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்பட 12 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப் பத்திரிகையுடன் சுமார் 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் காகித வடிவில் வழங்கப்பட்டன. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Night
Day