சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் நெல்லையில் வாகன ஓட்டிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல்  இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அகஸ்தியர்பட்டி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை மற்றும் தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழை காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளதால் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day