தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

75 நாட்களாக வேலை இல்லாமல் வாழ வழியின்றி தவித்து வருவதாகக் கூறி சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் மீண்டும்  போராட்டம் நடத்தினர்.

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6 மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்கள் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்தும் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம்  போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது.

இந்நிலையில்,  கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் தங்களுக்கு 75 நாட்களாக தூய்மைப் பணியை வழங்காத மாநகராட்சியைக் கண்டித்தும் சென்னை அண்ணா சாலையில் ஓமந்துரார் மருத்துவமனை அருகில் இன்று போராட்டத்தை தொடங்கினர். 

அதன் ஒருபகுதியாக சட்டமன்ற கூட்டத் தொடரில் தங்களது கோரிக்கைகள் குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியை முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கூறிய தூய்மைப் பணியாளர்கள், ராம்கி நிறுவனத்தில் பணியாற்ற  செல்ல மாட்டோம் என்றும் மாநகராட்சி பணி வழங்கவில்லை என்றால்  தங்களை கருணை கொலை செய்து விட வேண்டும் என்று  வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

Night
Day