சங்கரன்கோவிலில் போலீசார் தாக்கி உயிரிழந்த ஓட்டுநர் மனைவிக்கு அரசு வேலை வழங்க உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்த வேன் ஓட்டுநர் முருகன் மனைவிக்கு அரசு பணி வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

சங்கரன்கோவில் போலீசார் தாக்கியத்தில் உயிரிழந்த வேன் ஒட்டுனர் முருகனின் குடும்பத்திற்கு நிவாரணம் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரியும் முருகனின் மனைவி மீனா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முருகனின் உடலை பெற்று அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்து விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, முருகன் மனைவிக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத்தை 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும், அங்கன்வாடியில் அவருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கிராம உதவியாளர் பணியிடம் காலியாகும் பட்சத்தில் அந்த பணியை முருகனின் மனைவிக்கு வழங்க உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

Night
Day