தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் சட்ட விரோதமாக தண்ணீர் திருடும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. லாரிகளில் தனியார் தங்கும் விடுதி நிர்வாகத்தினர் தண்ணீர் எடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு விநியோகிக்கின்றனர். தற்போது வறண்ட சூழல் நிலவுவதால் கொடைக்கானலில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சட்டவிரோதமாக கொடைக்கானல் ஏரியில் நள்ளிரவு நேரங்களில் தண்ணீரை எடுத்து தனியார் தங்கும் விடுதிகளுக்கு பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்று வருகின்றனர். இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...