குல வணிகர் புரத்தில் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வாண வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 
திருநெல்வேலி மாநகரம், குல வணிகர்புரம் பகுதியில் பொதுமக்‍களை சந்திக்‍க வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குல வணிகர்புரம் சி.எஸ்.ஐ. தேவாலய நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க புரட்சித்தாய் சின்னம்மா தேவாலயத்திற்கு வருகை தந்தார். தேவாலயத்தில் புரட்சித்தாய் சின்னம்மா பிரார்த்தனை செய்தார்.

அப்போது தேவாலயத்திற்கு வந்த குழந்தைகள் புரட்சித்தாய் சின்னமாவிடம் இயேசு பிரானின் பொன்மொழிகள் கொண்ட பிரசுரங்கள் மற்றும் பைபிளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து சின்னம்மாவுடன் குழந்தைகள் புகைப்படம் எடுத்துக்‍ கொண்டனர்.

varient
Night
Day