குடியிருந்த வீடு தரைமட்டம்... கதறும் பெண்கள்... விளம்பர திமுக அரசு நிர்வாகி அட்டகாசம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே விவசாயியின் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு பெண்களையும் தாக்கியிருக்கிறார் திமுக நிர்வாகி ஒருவா்.. வீடு இருந்த தடம் கூட தெரியாமல், இடத்தை அழித்த திமுக நிர்வாகி மீது புகார் அளித்தும் காவல்துறையினா் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ன நடந்தது என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி ரெங்கநாதபுரம் பகுதியில் முத்துலட்சுமி என்பவா் தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இவா்கள் வீடு கட்டி வசித்து வரும் 12 சென்ட் நிலம், மானவாரி விவசாய நிலத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

பாலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ராஜா, இந்த இடம் தனக்கு சொந்தமானது எனவும் முத்துலட்சுமி குடும்பத்தினரை காலி செய்ய கூறி தொடர் பிரச்னையில் ஈடுபட்டு வந்தாகவும் கூறப்படுகிறது.

ஒன்றும் அறியாத முத்துலட்சுமி 5 நபர்களுக்கு சொந்தமான இடத்தினை நீங்கள் எவ்வாறு பத்திரம் முடித்தீர்கள் என அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு திமுக நிர்வாகி, பதில் ஏதும் கூறாமல், கடந்த வாரம், பெண்கள் குடியிருக்கும் வீடு என்று கூட பாராமல் வீட்டினை தரைமட்டமாக்கியுள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த முத்துலட்சுமி, போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். ஆனால் காவல்துறையினர் கண்துடைப்புக்காக திமுக பிரமுகர் ராஜா மீது சி.எஸ்.ஆர் பதிவு செய்து கண்டுக்கொள்ளமால் இருந்து வந்துள்ளனா். மேலும் பல முறை காவல்நிலையத்திற்கு நடையாய் நடந்தும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகாரும் எழுந்துள்ளது... 

காவல்துறையினா் நடவடிக்கை எடுக்காததால், வீடு இடிந்த நிலையில் முத்துலட்சுமி தனது மகள்கள் மணிமேகலை, மோனிகா மற்றும் பேரக் குழந்தையுடன் வீடு இல்லாமல் பரிதவித்து வந்துள்ளார்.

சனிக்கிழமை டிராக்டருடன் வந்த திமுக பிரமுகர் ராஜா, இடிந்த வீட்டில் இருந்து பொருட்களை டிராக்டரில் ஏற்றியும், பொருட்களை வீசி எறிந்தும் அட்டகாசம் செய்து இருக்கிறார்... 

இதனை தடுக்க முயன்ற முத்துலட்சுமி மகள் மோனிகாவை சரமாரியாகத் தாக்கி ரத்த காயங்கள் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வீடு இருந்த தடம் கூட தெரியாமல் அழித்து இடத்தினை கைப்பற்றி அவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறார்  திமுக நிர்வாகி ராஜா... 

என்ன செய்வதென்று தெரியாமல் நிலை தடுமாறி நின்ற முத்துலட்சுமி, தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தையுடன் புகார் அளித்தும் இதுவரையில், நடவடிக்கை எடுக்காத போடி காவல்நிலையத்திற்கு சென்று மீண்டும் புகார் அளித்திருக்கிறார். அதற்கும் காவல்துறையினா், அவா்களிடம் சமாதானமாக பேசிக் கொள்வோம் என முத்துலட்சுமியை திருப்பி அனுப்பி உள்ளனர்.

முறைகேடாக பத்திரங்கள் தயார் செய்து, தங்களை வீடு இல்லாமல் நடுத்தெருவில் நிற்க வைத்த திமுக பிரமுகர் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் விளம்பர திமுக அரசிடம் முத்துலட்சுமி குடும்பத்தினா் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடியிருக்கும் வீட்டினை தனிநபர் அகற்றுவதற்கு திமுக பிரமுகரால் மட்டும் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் பாலார்பட்டி ராஜா... 

வீட்டை இழந்த பெண்களோ தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என காணல் நீர் போல் காத்துக் கிடக்கின்றனர். வீட்டை இழந்து நிற்கும் பெண்களுக்கு விளம்பர திமுக அரசு துணை நிற்குமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்...

Night
Day