கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தாம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். 

மேடவாக்கம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் தனது மனைவி மற்றும் கர்ப்பிணி மகள் தீபிகாவுடன் போரூரில் இருந்து காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அனகாப்புத்தூர் அருகே வந்தபோது எதிரே வந்த கார் பத்மநாபன் காரின் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமைடந்த கர்ப்பிணி தீபிகா, தந்தை பத்மநாபன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day