ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து பத்திரத்தை கோயில் உண்டியலில் போட்ட தந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் 4 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரத்தை முன்னாள் ராணுவ வீரர் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.


கோனையூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயன் என்பவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும் சுப்புலட்சுமி, ராஜலட்சுமி என்ற 2 மகள்களும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், விஜயனும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இதனால் மன வேதனையில் இருந்த விஜயன் தான் சம்பாதித்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கான பத்திரத்தை ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் செலுத்தியுள்ளார். இதனையறிந்த இரு மகள்களும் பத்திரத்தை கொண்டு வருமாறு மிரட்டுவதாகவும், உண்டியலில் செலுத்திய பத்திரம் கோயிலுக்கே சேர வேண்டும் என்றும் விஜயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.  

Night
Day