இஸ்ரேலும் - ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் கடந்த 12 நாட்களாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், அங்கு போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என இரு நாடுகளுக்கும் அறிவுறுத்தி இருந்தார்.

இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதில் தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தி வருகிறது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி இருப்பது தனக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டார். 

மேலும், தாங்கள் இரு வெவ்வேறு நாடுகள் என்பதையும், நீண்ட நேரமாக கடுமையாக சண்டையிட்டு வருகிறோம் என்பதை உணர்ந்து தான் தாக்குதல் நடத்தி வருகிறார்களா என சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

varient
Night
Day