கரூர்: வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திமுக பெண் நிர்வாகி மீது புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் காதப்பாறை அருகே கணவருடன் சேர்த்து வைக்க கோரியும், திமுக பெண் நிர்வாகியை கண்டித்தும் கர்ப்பிணி பெண் பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டார். காதப்பாறை அன்புநகரை சேர்ந்த திமுக பெண் நிர்வாகி கனிமொழி என்பவருடைய மகன் கவியரசனுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணமானது. தற்போது ரம்யா 6 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், கனிமொழி அடிக்கடி வரதட்சணை கேட்டு ரம்யாவை வாழவிடாமல் செய்ததாக கூறப்படுகிறது. 4 மாதங்களுக்கு முன்பே கவியரசன் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதாக கூறி, கனிமொழி, மருமகள் ரம்யாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து கடந்த 4 மாதங்களாக கணவரை பார்க்க முயற்சி வருவதாக கூறிய ரம்யா, தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி அவரது வீட்டின் முன் பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

varient
Night
Day