கன்னியாகுமரி: மஹா சிவராத்திரியையொட்டி பூக்கள் விலை மும்மடங்கு உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மஹா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை மும்மடங்கு அதிகரித்துள்ளது. மஹா சிவராத்திரியையொட்டி அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால், தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. விலை மும்மடங்கு உயர்ந்த நிலையில், பூக்களின் விற்பனையும் களைகட்டியது. 500 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ கிலோ ஆயிரத்து 300 ரூபாய்க்கும், பிச்சி ஆயிரத்து 500க்கும், முல்லை ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கனகாம்பரம் 750 ரூபாய்க்கும் விற்பனையானது. 

varient
Night
Day