கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை : சென்னை மாநகராட்சி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க அவகாசம் கோரிய வழக்கில், வர்த்தகர்களின் கோரிக்கை குறித்து சென்னை மாநகராட்சி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகளில் மே 30க்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக வர்த்தகர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக பெயர் பலகையை மாற்ற முடியாது என்றும் தமிழில் பெயர் வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வர்த்தகர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வர்த்தகர்களின் கோரிக்கை குறித்து நான்கு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என்றும், அதுவரை கடும் நடவடிக்கை எடுக்ககூடாது எனவும் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Night
Day