பஹல்காமில் பெண் சுற்றுலாப் பயணிகள் குறித்து சர்ச்சை கருத்து..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காமிற்கு சுற்றுலா வந்த பெண் சுற்றுலாப் பயணிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பாஜக எம்பி ராம் சந்தர் ஜங்ரா மன்னிப்பு கேட்டுள்ளார். ஹரியானா மாநிலம் பிவானியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பஹல்காமில் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்கு போர்க்குணம், துணிச்சல், வைராக்கியம் இல்லை என்றும், பயங்கரவாதிகளை எதிர்த்து அவர்கள் போராடியிருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் சர்ச்சை வெடித்த நிலையில், ஜங்ராவின் பேச்சுக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ள ஜங்ரா, அரசியல் சர்ச்சையை உருவாக்குவதற்காக தனது பேச்சு திரிக்கப்பட்டுள்ளதாக கூறி 4 நிமிட காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.   

Night
Day