நடிகர் ராஜேஷ் மறைவுக்கு ரஜினி இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நெருங்கிய நண்பரும், நடிகருமான ராஜேஷின் மரணச் செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் தருவதாகக் கூறியுள்ளார். அருமை மனிதரான ராஜேஷின் ஆத்மா சாந்தியடையட்டும் எனக் குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.

Night
Day