ஒடிசாவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது தாக்குதல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தில், முறைகேடுகள் குறித்து செய்தி சேகரிக்க முயன்றபோது, ​​ஒரு பத்திரிகையாளர் பொது இடத்தில் கட்டிவைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஜய் பிரதான் என்ற அந்த பத்திரிகையாளர், அங்குள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கட்டுமான பணியில் அரங்கேறிய முறைகேடுகள் குறித்து செய்தி சேகரிக்க சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல் அவரின் கைகளை கட்டி வைத்தும் முகத்தில் உதைத்தும் கொடூரமாக தாக்கியதோடு, செல்போன், மைக்ரோஃபோன் மற்றும் பிற உபகரணங்களையும் பறித்துச் சென்றது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், ஒரு சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார், கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

varient
Night
Day