கடந்த 22 ஆண்டுகளாக சன் குழுமத்தில் முறைகேடு - நாராயணன் திருப்பதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சன் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கியதில் இருந்தே அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிவந்திருப்பதாக பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு வந்த சன் டிவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது 2002 முதல் 2006 வரை சன் நிறுவனத்திற்காக நடந்த தொலைபேசி இணைப்பக முறைகேடு குறித்த விசாரணையை மீண்டும் தொடங்கி குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Night
Day