அரசுப் பேருந்தில் கழன்று ஓடிய சக்கரங்கள் - பயணிகள் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையிலிருந்து குற்றாலம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் பின்புறம் உள்ள டயர் கழன்று ஓடியதால் ஓட்டுநரும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

விபத்தில் பேருந்தில் பயணித்த 30 பேரில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பேருந்தின் பின்புறம் உள்ள லேயர் ஜாயிண்ட் உடைந்தநிலையில் பேருந்தை மெதுவாக இயக்கி, ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தங்களின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பயணிகள் தங்களின் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Night
Day