உருவாகும் மோன்தா புயல்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு...

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் மோன்தா புயல் வரும் 28ம் தேதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய தீவிரக் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவியது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் 950 கிலோ மீட்டர் தொலைவில்  புயல் சின்னம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை மறுநாள் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த புயலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பெயர் வரிசைப்படி, மோன்தா என பெயரிடப்பட உள்ளது. இந்த மோன்தா புயல் வரும் 28ம் தேதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திராவின் மச்சூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே வரும் 28ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையை கடக்கும் சமயத்தில் 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோமீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும்,

இதன்காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு ஆந்திராவிற்கு அதிகன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் மற்றும் 28-ஆம் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day