எழுத்தின் அளவு: அ+ அ- அ
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோவிந்தா... கோவிந்தா... பாடலுடன் நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை வெளியிட தடை கோரியும், படத்துக்கு வழங்கிய சென்சார் சான்றை நிறுத்தி வைக்க கோரியும் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்த படத் தயாரிப்பு நிறுவனம், சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், டியூன் மியூட் செய்துவிட்டதாகவும் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து 16ம் தேதி வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.