விஷால் ரூ.21.29 கோடி கடனை செலுத்த உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா பைனான்சியரான அன்புச் செழியனிடம் நடிகர் விஷால் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடன் தொகையை அவருக்காக லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இதையொட்டி, கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை நடிகர் விஷால் மீறியதால் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷாலுக்கு உத்தரவிட்டுள்ளது.

varient
Night
Day