ஓட்டுநர் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில் தயாரிக்க ரூ.1538 கோடி ஒப்பந்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் ரயில்களை தயாரிப்பதற்காக ஆயிரத்து 538 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஸ்டாண்டர்ட் கேஜ் மெட்ரோ ரயில்களை வடிவமைத்து, தயாரித்து பராமரிக்கும். மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதல் மெட்ரோ ரயில் 2027- ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து மே மாதம் 2028 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ரயில்கள் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day