சினிமா
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்த...
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவநட்சத்திரம் திரைப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், பார்த்திபன், சிம்ரன், ரிது வர்மா, விநாயகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 2017ம் ஆண்டு உருவான படம் பல்வேறு பிரச்னைகளால் தள்ளி போனது. கடந்த வருடம் நவம்பர் மாதம் படம் வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பணப்பிரச்னையால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், பிரச்னைகள் சரி செய்யப்பட்டு வரும் 29ம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்த...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...