ரவி மோகன் பிரிவதற்கு 3வது நபர்தான் காரணம்- ஆர்த்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தங்களது பிரிவுக்கு வெளியில் இருந்து வந்த 3வது நபரே காரணம் என நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி தம்பதி விவகாரத்து வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளநிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டி அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் ரவியின் மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல என்றும் தங்கள் வாழ்வில் வந்த ஒரு 3வது நபரே காரணம் எனக் கூறியுள்ளார்.

தங்களைப் பிரித்தது தங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல என்றும் வெளியில் இருந்து வந்த ஒருவர் தான் என்றும் ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார். "உங்கள் வாழ்வின் ஒளி" என அறியப்படும் அவர் தங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை என பாடகி கெனிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இந்த நபர், சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே தங்கள் வாழ்கையில் வந்துவிட்டார் என்றும் இது வெறும் குற்றச்சாட்டு அல்ல, போதிய ஆதாரங்களுடன் கூறுவதாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார். ரவி மோகன் வெறும் காலுடன் செல்லவில்லை என்றும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள காருடன்தான் சென்றுள்ளார் என்றும் ஆர்த்தி ரவி கூறியுள்ளார்.

varient
Night
Day