எழுத்தின் அளவு: அ+ அ- அ
அரக்கோணம் அருகே திமுக பிரமுகரால் ஏமாற்றப்பட்ட மாணவி, தனது புகார் குறித்து போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பருத்திப்புத்தூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உள்ள தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அடித்து துன்புறுத்துவதாகவும், முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சி மேற்கொண்டதாகவும் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து தாலுகா காவல்நிலையம், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் புகார் அளித்தும் அவர் மீது வழக்குபதிவு செய்யாமல், போலீசார் தன்னை அலைக்கழித்ததாக குற்றஞ்சாட்டிய பெண் கடந்த 17ம் தேதி டிஜிபி அலுவலகத்திலும் தெய்வசெயல் மீது புகார் அளித்தார். இந்நிலையில் காவல்துறையினரானல் தான் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதாகவும், இதனால் தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.