திருப்பூர் விஷவாயு பலி - மூவரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அருகே சாய ஆலையில் கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது தொடர்பாக உரிமையாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவருடைய சாய ஆலையில் 4 பேர் பாதுகாப்பற்ற முறையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ததாக தெரிகிறது. அப்போது அவர்களை விஷவாயு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து சரவணன், வேணுகோபால் ஆகிய 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, ஹரி கிருஷ்ணன், சின்னசாமி ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஹரி கிருஷ்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆலை உரிமையாளர் நவீன், பொதுமேலாளர் தனபால், செப்டிக் டேங்க் லாரி ஓட்டுநர் சின்னச்சாமி, மேற்பார்வையாளர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 30 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினால் தான் உடலை வாக்குவோம் என உறவினர்கள் கூறினர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சாய ஆலை நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. 

Night
Day