கல்குவாரியில் மண்சரிவு - பலி எண்ணிக்கை 6-ஆக அதிகரிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் SS கோட்டை அருகே கல்குவாரியில் மண் சரிந்த விபத்தில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SS கோட்டை அடுத்த மல்லாக்கோட்டை அருகே செயல்படும் தனியார் கல் குவாரியில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இதனால் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. மண் சரிவில் வேறுயாரேனும் சிக்கி உள்ளார்களா என மீட்பு பணிக்கு பிறகே தெரியவரும் என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குவாரி முறையான அனுமதியுடன் செயல்பட்டதா? அல்லது சட்டவிரோதமாக இயங்கி வந்ததா? என்று விசாரித்து வருகின்றனர். 

Night
Day