புத்தகங்கள் படிக்க வேண்டும் -நடிகர் ரஜினி

எழுத்தின் அளவு: அ+ அ-

அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நாவல் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  எம்.பி.யுமான சு.வெங்கடேசன் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவல் ஒரு லட்சம் பிரதிகளை கடந்ததை கொண்டாடும் வகையில் வெற்றி விழா  நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், வேள்பாரி திரை வடிவத்துக்கு அனைவரையும் போல தானும் ஆர்வமுடன் காத்திருப்பதாக கூறினார். அனைவரும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறிய நடிகர் ரஜினிகாந்த், ஓய்வுக்கு பிறகு புத்தகங்களை படிக்க தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Night
Day