"குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை" - டிஎன்பிஎஸ்சி விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தேர்வர்கள் முழுவீச்சில் தயாராகிவரும் நிலையில், தேர்வுக்கான வினாத்தாள்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் ஆம்னி பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளம்பர திமுக அரசின் அலட்சியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

டிஎன்பிஎஸ்சி தேர்வு என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளைக் குறிக்கும். இதில், குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற பல்வேறு தேர்வுகள் உள்ளன. இந்தத் தேர்வுகள் அரசுப் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய நடத்தப்படுகின்றன.  டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பினாலும் குரூப் 4 தேர்வுக்கு வேறு எந்த தேர்வுக்கும் இல்லாத அளவுக்கு தேர்வர்கள் மத்தியில் மவுசு உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதிதான் என்றாலும் கூட டிகிரி, மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் கூட இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். 

TNPSC குரூப் 4 பணியிடங்களில் 3 ஆயிரத்து 935 காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு மே மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியது. 

கிராம நிர்வாக அலுவலர், ஜூனியர் உதவியாளர், ஜூனியர் வருவாய் ஆய்வாளர், ஜூனியர் அசிஸ்டென்ட், தட்டச்சர், தனிப்பட்ட எழுத்தர், கள உதவியாளர், வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அலுவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பித்த 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேருக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. காலியாக உள்ள ஒரு பணியிடத்திற்கு 353 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள கருவூலங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் வினாத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் பேருந்துகளின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு A4 பேப்பர் சீட் ஒட்டி சீல் வைத்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்துசெல்லாமல் ஆம்னி பேருந்தில் வினாத்தாள் எடுத்து சென்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வின் போது வாகனங்களில் பணியில் இருந்த காவல்துறையினர் மூலமாக வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

போதிய பாதுகாப்பின்றி தனியார் பேருந்தில் வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைத்த விளம்பர திமுக அரசின் அலட்சிய போக்கிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் நலன் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் விளம்பர திமுக அரசு அலட்சியமாக இருந்து வருவதையே இந்த சம்பவம் நிரூபிப்பதாகவும் இதனால் வினாத்தாள் கசியும் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்களும், தேர்வர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் மறுத்துள்ளார். 

Night
Day