ஒரு கிராமத்தின் அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய வளர்ப்பு நாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இமாச்சலப் பிரதேச மண்டியில் வளர்ப்பு நாய் ஒன்று கிராம மக்கள் அனைவரின் உயிரை காப்பாற்றிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. சியாதி என்ற கிராமத்தில் ராக்கி என்பவர் வளர்த்து வரும் நாய் ஒன்று கடந்த மாதம் 30 ஆம் தேதி இரவு தொடர் மழை பெய்து கொண்டிருந்த போது தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால்  விழித்தெழுந்த ராக்கி அதனிடம் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின்   தரைதளத்தில் மழைநீர் தேங்கியதையும் வெளியே நிலச்சரிவு ஏற்பட்டதையும் பார்த்து  குடும்பத்துடன் வெளியேறினார். மேலும் அந்த அந்த கிராமத்தில் இருந்த அனைவரையும் எச்சரித்ததால் அனைவரும் நிலச்சரிவில் இருந்து தப்பினர்.

Night
Day