நா.முத்துகுமார் போல் பாடல் எழுத ஆளில்லை - சிவகார்த்திகேயன் பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நல்ல பாடலாசிரியர்கள் இருந்தாலும் கவிஞர் முத்துகுமார் போன்று எழுத ஆளில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆனந்த யாழை என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடைபெற்றது. இதில் நா.முத்துக்குமாருடன் பணியாற்றிய இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், முதன் முதலில் நெல்சன் படத்தில் பாடல் எழுதியதற்கான சம்பளத்தை நா.முத்துகுமார் குடும்பத்திற்கு கொடுத்ததாகவும், அது தான் செய்ய வேண்டிய கடமை என்றும் தெரிவித்தார். இன்றும் பாடல் எழுத போகும்போது அவரது 2 பாடல்களை கேட்டுவிட்டு தான் எழுதுவதாக சிவகார்த்திகேயன் கூறினார்.

Night
Day