எழுத்தின் அளவு: அ+ அ- அ
ரஷ்யாவில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ரஷியாவின் கிழக்கு பகுதியில் பசிபிக் கடற்கரையில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அங்குள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சாட்ஸ்கி நகருக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஒரு மணி நேரத்திற்குள் ரிக்டர் அளவு கோலில் 6.6, 6.7, 7.4, 6.7, 7 என்ற அளவுகளில் அடுத்தடுத்து ஐந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் குறிப்பாக 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக, ரஷ்யா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்தால் ரஷ்யாவின் பசுபிக் பிராந்திய மக்கள் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே ஹவாய் தீவுகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது.