தெப்பக்காடு நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவடடம் முதுமலை -  தெப்பக்காடு நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டம் வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி பசுமையாக காட்சி அளிப்பதால் யானைகள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தெப்பக்காடு பகுதிக்கு வந்த காட்டு யானை கூட்டம் திடீரென மசினகுடி சாலையை கடப்பதற்காக குட்டிகளுடன் நீண்டதூரம் சாலையில் நடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அண்மைக்காலமாக காட்டு யானைகள் சாலை பகுதிக்கு வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Night
Day