கழுத்து நெறிக்கப்பட்டு இளம்பெண் கொலை - சிட்கோ பகுதியில் உடல் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளம் பெண் கழுத்தை நெறித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணிக்கம்பிள்ளைசத்திரம் பகுதியில், அமைந்துள்ள சிட்கோ நுழைவாயிலில் அருகே, இளம்பெண் ஒருவர் துப்பட்டாவால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பெண் கழனிவாசல் பட்டியை சேர்ந்த 22 வயதான சுகன்யா என்பதும், இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, சுகன்யாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அவர் கடைசியாக பேசிய இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day