கை மல்யுத்த போட்டி : தங்கம் வென்று சாதனை படைத்த பார்வையற்ற கல்லூரி மாணவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் நடைபெற்ற கை மல்யுத்தம் போட்டியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பார்வை திறன் மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த நெசவுத்தொழிலாளி முத்துகுமாரின் மகள் திவ்யதர்ஷினி, பார்வையற்ற நிலையில் சேலம் அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கை மல்யுத்தம் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், கேரளாவில் நடைபெற்ற கை மல்யுத்த போட்டியில் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் அவர், பல்கேரியா நாட்டில் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார். தந்தை நெசவுத்தொழில் செய்துவரும் நிலையில், இப்போட்டியில் பங்கேற்க போதிய பணவசதி இல்லாததால் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Night
Day