அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மனைவி கொலை - கணவன் வெறிச்செயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மனைவியை கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்த விஷ்ரூத் என்பவருக்கும் ஸ்ருதி என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விஷ்ரூத், மனைவியை தாக்கியதில் அவர் காயமடைந்ததால், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனைக்குள் நுழைந்த விஷ்ரூத், மயக்கத்தில் இருந்த மனைவி ஸ்ருதியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதில் ஸ்ருதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் ஸ்ருதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய கணவர் விஷ்ரூத்தை தேடி வருகின்றனர். 

Night
Day