எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் அருகே திமுக அமைச்சர் நாசாருக்கு நெருங்கிய திமுக கவுன்சிலர் தனது ஆதரவாளர்களுடன் நகைக் கடை உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
திருவள்ளூவர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள இயங்கிவரும் தனியார் நகைக்கடையில், ஆவடி மாநகராட்சி 27வது வார்டு திமுக கவுன்சிலர் வெங்கடேஷ், இரண்டரை சவரன் நகையை 75 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து வெங்கடேஷ் நகையை கேட்டுள்ளார். ஆனால், நகையை கொடுக்காமல், நகைக்கடை உரிமையாளர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர், தனது ஆதரவாளர்களுடன் சென்று நகைக்கடை உரிமையாளரை தாக்கியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, நகைக்கடை உரிமையாளர் மீது பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்த புகாரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் நகைக்கடை உரிமையாளாரை திமுக கவுன்சிலர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.