ஹார்டுவேர் கடையின் மின்தூக்கி அறுந்து விழுந்து பெண் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள ஹார்டுவேர் கடையின் மின்தூக்கி அறுந்து விழுந்து பெண் உயிரிழந்தார். மயிலம் சந்தையில் ஜெகநாதன் என்பவர் ஹார்ட்வேர் கடை நடத்தி வருகிறார். அங்கு தென்னூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மனைவி சுமதி என்ற பெண் பணியாற்றி வந்துள்ளார். 3 மாடி கட்டிடத்தின் உள்ளே கனரக பொருட்களை கொண்டு செல்ல மின்தூக்கி பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடையில் உள்ள பொருட்களை மின்தூக்கி மூலம் மேல் மாடிக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட போது மின்தூக்கியின் கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதில் மின்தூக்கியின் உள்ளே இருந்த சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 

Night
Day